Tuesday, 11 September 2018

எழுத்துகள்

எழுத்து வளர்ச்சிப் படிமுறைகள்:

ஓவிய எழுத்து → அசை எழுத்து → ஒலி எழுத்து.

கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வகை

1. வட்டெழுத்து
2. தென் பிராமி எழுத்து
3. கிரந்த எழுத்து


தொன்மையான எழுத்து வட்டெழுத்து.

பௌத்தர்கள் புகுத்தியது பிராமி எழுத்து.

வட மொழியாளர் புகுத்தியது கிரந்த எழுத்து.

தமிழ் நாட்டில் வடமொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது கிரந்த எழுத்து.

ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ (ஸ்ரீ) போன்றன கிரந்த எழுத்துக்கள்.

பண்டைய இந்தியாவில் வழங்கிய எழுத்து வடிவங்களைப் ப்றறிக் கூறும் நூல்கள்:

சமயவாங்க சூத்திரம், பண்ணாவனா சூத்திரம், (18 லிபி) மகாவஸ்து (30 லிபி), லலிதவிஸ்தாரம் (64 லிபி. இது புத்தர் காலத்தது என்பர்).

குமரிலபட்டர் எழுதிய நூல் சமவாயாங்க சூத்திரம்.

குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும், மொழி தமிழ் என்றும் கூறியவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம்.

No comments:

Post a Comment