Labels

  • TAMIL LITERARY INFORMATION - தமிழ் இலக்கியத் தகவல்கள்
Showing posts with label TAMIL LITERARY INFORMATION - தமிழ் இலக்கியத் தகவல்கள். Show all posts
Showing posts with label TAMIL LITERARY INFORMATION - தமிழ் இலக்கியத் தகவல்கள். Show all posts

Tuesday, 11 September 2018

திராவிட மொழிக் குடும்பம்

ஒரு காலத்தில இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி பழந்திராவிடம் ஆகும்.

இந்தியாவில் உள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக் குடும்பம் ஆகும்.

தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் வில்லியம் கேரி.

மொழிக் குடும்பம்

இலக்கணம், தொடரியல் அமைப்பு, அடிச் சொற்களின் ஒப்புமை, மொழிநிலை போன்றவற்றில் உள்ள நெருங்கிய தொடர்பே மொழிக் கும்பத்திற்கு
அடிப்படை.

உலக மொழிகளை எட்டு மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர்.

எழுத்துகள்

எழுத்து வளர்ச்சிப் படிமுறைகள்:

ஓவிய எழுத்து → அசை எழுத்து → ஒலி எழுத்து.

கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வகை

1. வட்டெழுத்து
2. தென் பிராமி எழுத்து
3. கிரந்த எழுத்து

Monday, 10 September 2018

உட்பிணைப்பு நிலைமொழி



அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டிருப்பின் அது உட்பிணைப்புநிலை மொழி எனப்படும்.

ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும், அரபு மொழிகளும் இப்பிரிவைச் சார்ந்த மொழிகளாகும்.

கொணா, கொணர், தந்தை, தவ்வை என வரும்

இதில் பகுதி விகுதிகளை எளிதில் பிரித்தறிய முடியாது.

ஒரு மொழி தனிநிலையா, ஒட்டுநிலையா, உட்பிணைப்பு நிலையா என்பது அம்மொழியின் பெரும்பாலான சொற்களின் அமைப்பைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

ஆங்கில மொழி உட்பிணைப்பு நிலையிலிருந்து தனி நிலைக்கு வந்துவிட்டது.

I Shall go போவேன் – போ (go) + வ் (Shall) + ஏன் (I)

வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினாலும் அதன் பொருள் மாறாதது தொகுதிநிலை எனப்படும்.

நேற்று முருகன் பாடம் படித்தான் என்பது முருகன் நேற்றுப் பாடம் படித்தான் என்றோ பாடத்தை முருகன் நேற்று்ப படித்தான் என்றோ மாற்றினாலும் பொருள் மாறாது வருதல் காண்க.

ஒட்டுநிலைமொழியும், உட்பிணைப்பு நிலை மொழியும் தொகதிநிலையுள் அடங்கும்.

வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினாலும் அதன்பொருள் மாறுவது பிரிநிலை எனப்படும்.

சீனமொழி – நீ தா ஞோ – நீ என்னை அடிக்கிறாய்  ; ஞோ தா நீ – நான் உன்னை அடிக்கிறேன் என வரும்.

மூன்று நிலைகளும் (தனி, ஒட்டு, உட்பிணைப்பு) ஒரு மொழியில் மாறிமாறி வரும். இம் மாறுதலை மொழியின் மாவட்டம் என்பர்.

ஒட்டு நிலைமொழி



பகுதியுடன் இடைநிலை, விகுதிகளை ஒட்டிக்கொள்ளும் சொற்களை உடைய மொழி ஒட்டுநிலை மொழி எனப்படும். தேவைப்பட்டால் இவற்றைத் (பகுதி, இடைநிலை, விகுதி என தனித்தனியே பிரித்து விடலாம்.

சித்திய மொழிகள், திராவிட மொழிகள், மலேயா, பாசினேஷியன் மொழி, ஜப்பான், கொரியா, பின்னிஷ், பாஸ்க் போன்றன ஒட்டுநிலை மொழிகளாகும்.

கண்ணன், அறிஞர், வந்தான், பார்த்தான் என வரும்.

ஒட்டுநிலையை முன்னொட்டு, பின்னொட்டு என இரண்டாகப் பிரிப்பர்.

கீரன் – நக்கீரன், நாயகன் – விநாயகன், நீதி – அநீதி, பின்னை – நப்பின்னை இவை முன்னொட்டுகள்.

படித்தான், கொடுப்பவர் இவை பின்னொட்டுகள்.

தனிநிலை மொழி




இடைநிலை, விகுதி இல்லாமல் பகுதியாகவே உள்ள சொற்களைக் கொண்ட மொழி தனி நிலைமொழி எனப்படும்.

சீனமொழி, சயாம் மொழி, பர்மிய மொழி, திபெத்திய மொழிகள் தனி நிலை மொழிகளாகும்.

நீ, வா, போ, பூ, தை, கை, வை…, என வரும்.

மொழியின் தோற்றக் கொள்கை




பவ் -வவ் என்ற இசைமொழி அல்லது போலி மொழிக்கொள்கை

பூப் – பூப் என்ற உணர்ச்சி மொழிக் கொள்கை

டிங் – டாங் என்ற பண்புமொழிக் கொள்கை

யோ – யே என்ற ஏலேலோ அல்லது தொழில் ஒலிக்கொள்கை

தானான என்ற பாட்டு மொழி அல்லது இன்பப் பாட்டுக் கொள்கை

மொழி பற்றிய தகவல்கள்



மொழியின் தோற்றம் ஆய்வுக்கு அப்பாற்பட்டது.

சிவபெருமானின் உடுக்கையிலிருந்து வடமொழியும் (சமஸ்கிருதம்), தென்மொழியும் (தமிழ்மொழி ) பிறந்தன.

வடமொழியைப் பாணிணிக்குக் கொடுத்தவர் சிவபெருமான்.

தென்மொழியை அகத்தியருக்குக் கொடுத்தவர் சிவபெருமான்

இத்தாலி மொழியைத் தந்தவர் தாந்தே.

ஆங்கில மொழியைத் தந்தவர் சாசர்.

ஜெர்மன் மொழியைத் தந்தவர் லூதர்

டச்சு மொழியைத் தந்தவர் கிறிஸ்டியேர்ன் பெடெர்ஸன்.

மொழியின் தொடக்கத்தில் இருந்தவை அடிச்சொற்கள் அல்ல. நீண்ட ஒலித்தொடர்களே (வாக்கியங்கள்) ஆகும்.

ஒலித்தொடர்களில் இருந்த மனிதனால் அடிசசொற்கள் (Root Word) படைத்துள்ளான்.