ஒரு காலத்தில இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி பழந்திராவிடம் ஆகும்.
இந்தியாவில் உள்ள மொழிக் குடும்பங்களில் மிகத் தொன்மை வாய்ந்தது திராவிட மொழிக் குடும்பம் ஆகும்.
தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் வில்லியம் கேரி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன் முதலில் கூறியவர் எல்லீஸ்.
திராவிடர் என்ற சொல்லை இடைக் காலத்தில் பயன்படுத்தியவர் குமரிலப்பட்டர்.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை கால்டுவெல்.
கால்டுவெல் எழுதிய நூல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.
கால்டுவெல் இந்நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்கள் கா. கோவிந்தன், க.ரத்தனம்.
தமிழ் முதலான மொழிகளுக்குத் திராவிட மொழிக் குடும்பம் என்று முதன் முதலில் பெயர் சூட்டியவர் கால்டுவெல்.
திராவிடம் - திரமிடம் - திரமிளம் - த்ரமினோ - தமினோ - தமிழ்.
தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் தோன்றியது என்று கருத்துடையவர்கள் சட்டர்ஜி, வி.ஆர்.ஆர் தீட்சிதர் போன்றோர்.
கால்டுவெல் திராவிட மொழிகளைத் திருந்திய திராவிட மொழிகள், திருந்தாத திராவிட மொழிகள் என இரண்டாகப் பிரித்தார்.
திருந்திய திராவிட மொழிகள் மொத்தம் ஆறு:
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு.
திராவிட மொழிகள் மத்திய ஆசியாவில் வழங்கும் சித்திய மொழிகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று காட்டியவர் கால்டுவெல்.
எழுத்து வடிவமும், இலக்கிய வளமும் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள திருந்திய திராவிட மொழிகள் துளுவும் குடகும் ஆகும்.
துளு மொழி இன்று கன்னட எழுத்தால் எழுதப்படுகிறது.
கால்டுவெல்லின் நூல் பெரம்பாலும் தென் திராவிட மொழிகளைப் பற்றியதாக இருப்பதால் அதனைத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொதுநிலையால் சுட்டுவதைவிட தென் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைப்பதே பொருத்தம் என்று கூறியவர் தெ.பொ.மீ.
தற்போது 25க்கும் மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பெருமொழிகள் என்றும் சிறுமொழிகள் என்றும் பிரிப்பர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன பெருமொழிகள். மற்றவை சிறு மொழிகள்.
மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்பை அடிப்படையாகக் கொண்டு திருந்திய திராவிட மொழிகள், திருந்தாத திராவிட மொழிகள் என்றும் பிரிப்பர்.
இவற்றைச் செப்பமுள்ள திராவிட மொழிகள் என்றும் செப்பம்றத் திராவிட மொழிகள் என்றும் அழைப்பர்.
மொழி வழங்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என்றும் பிரிப்பர்.
தென் திராவிட மொழிகள் - 8, தமிழ், மலையாளம், குடகு, கோடா, தோடா, படகா, கன்னடம், துளு.
நடுத்திராவிட மொழிகள் - 11. தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டோ, கோலமி, நாயக்கி, பர்ஜி, கடப்பா.
வடதிராவிட மொழிகள் - 3. குரூக், மால்டொ, பிராகுயி.
இருளா, எருகலா, கோயா, போன்றவற்றைத் தனித் திராவிட மொழிகளாகக் கொள்வாரும் உண்டு.
வேறு பெயர்கள்
குடகு - கொடகு, கோதகி, கூர்க்
கோடா - கோதம்
தோடா - துதம், தொத, துத (துதம் என்பார் கால்டுவெல்)
துளு - துளுவம்
குவி - கூ, கோந்த்
குரூக் - ஒராவான், ஒரியன் (ஒராவோன் என்பார் கால்டுவெல்)
துளு - துளுவம்
குவி - கூ, கோந்த்
குரூக் - ஒராவான், ஒரியன் (ஒராவோன் என்பார் கால்டுவெல்)
இராஜ்மகால் - மால்டோ, மாலர்.
No comments:
Post a Comment