Monday, 10 September 2018

உட்பிணைப்பு நிலைமொழி



அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டிருப்பின் அது உட்பிணைப்புநிலை மொழி எனப்படும்.

ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும், அரபு மொழிகளும் இப்பிரிவைச் சார்ந்த மொழிகளாகும்.

கொணா, கொணர், தந்தை, தவ்வை என வரும்

இதில் பகுதி விகுதிகளை எளிதில் பிரித்தறிய முடியாது.

ஒரு மொழி தனிநிலையா, ஒட்டுநிலையா, உட்பிணைப்பு நிலையா என்பது அம்மொழியின் பெரும்பாலான சொற்களின் அமைப்பைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது.

ஆங்கில மொழி உட்பிணைப்பு நிலையிலிருந்து தனி நிலைக்கு வந்துவிட்டது.

I Shall go போவேன் – போ (go) + வ் (Shall) + ஏன் (I)

வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினாலும் அதன் பொருள் மாறாதது தொகுதிநிலை எனப்படும்.

நேற்று முருகன் பாடம் படித்தான் என்பது முருகன் நேற்றுப் பாடம் படித்தான் என்றோ பாடத்தை முருகன் நேற்று்ப படித்தான் என்றோ மாற்றினாலும் பொருள் மாறாது வருதல் காண்க.

ஒட்டுநிலைமொழியும், உட்பிணைப்பு நிலை மொழியும் தொகதிநிலையுள் அடங்கும்.

வாக்கியத்தில் சொற்களை இடம் மாற்றினாலும் அதன்பொருள் மாறுவது பிரிநிலை எனப்படும்.

சீனமொழி – நீ தா ஞோ – நீ என்னை அடிக்கிறாய்  ; ஞோ தா நீ – நான் உன்னை அடிக்கிறேன் என வரும்.

மூன்று நிலைகளும் (தனி, ஒட்டு, உட்பிணைப்பு) ஒரு மொழியில் மாறிமாறி வரும். இம் மாறுதலை மொழியின் மாவட்டம் என்பர்.

No comments:

Post a Comment